மியான்மரில் நடக்கும் அரசியல் குழப்பம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சில் விடுத்த அழைப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என ஐநா அந்நாட்டு ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
x

மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங் சான் சூக்கியைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு ஆட்சியைக் கைப்பற்றியது அந்நாட்டு ராணுவம். ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அந்நாட்டில் அரசியல் குழப்பங்கள் தலைவிரித்தாடும் நிலையில், இது குறித்த முதல் தீர்மானத்தை ஐநா நிறைவேற்றியுள்ளது. அதன்படி, ஆங் சான் சூகி மற்றும் முன்னாள் ஜனாதிபதி வின் மியின்ட் உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மியான்மர் ராணுவத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்