இசையமைப்பாளர் DSP உடன் திருமணமா? - நடிகை பரபரப்பு தகவல்

x

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை திருமணம் செய்ததாக வெளியான தகவலை நடிகை புஜிடா மறுத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும், தெலுங்கில் ஊப்ரி, ரங்கஸ்தலம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை புஜிடாவும் அண்மையில் திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள புஜிதா, அடிப்படை ஆதாரமில்லாமல் சிலர் வதந்தி பரப்பி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். தான் யாரையும் காதலிக்கவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்