நயன்தாரா முதல் ஹன்சிகா வரை..2022ல் திருமண பந்தத்தில் இணைந்த திரை பிரபலங்கள்

x

திருமண பந்தத்தில் இணைந்த ' 'நாகினி' புகழ் மௌனி ராய்

கடந்த ஜனவரி மாதம் சுராஜ் நம்பியார் என்ற தொழில் அதிபரின் கரம் பிடித்தார் , மௌனி ராய். நாகினி தொடர் மூலம் பிரபலம் அடைந்து... பாலிவுட் ஹீரோயினாக வலம் வந்தவர், மௌனி ராய். இவர்களது திருமணம் பெங்காலி முறைப்படியும், தென்னிந்திய முறைப்படியும் நடைபெற்றது.

காதல் கணவர் ரன்பீர் கபூரை கரம் பிடித்த ஆலியா பட்

தனது நீண்ட நாள் crush ஆன பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், பாலிவுட் நடிகை ஆலியா பட். இந்த தம்பதியர் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தனர். இந்த காதல் ஜோடியின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது.

ஒரே படம் - மலர்ந்த காதல் - இணைந்த ஆதி நிக்கி-கல்ராணி ஜோடி

ஆலியா பட் - ரன்பீர் கபூரை போல்

படத்தில் இணைந்து நடிக்கும் போது காதலில் விழுந்து, திருமண பந்தத்தில் இணைந்த தென்னிந்திய ஜோடி ஆதி-நிக்கி கல்ராணி தம்பதியர். மரகதநாணயம் படத்தில் இணைந்து நடித்த இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

கணவருடன் துபாயில் செட்டிலான நடிகை பூர்ணா

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர், நடிகை பூர்ணா.

இவர் ஆசிப் அலிக் என்ற தொழில் அதிபரை துபாயில் வைத்து, கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

கை கூடிய விக்கி - நயன் காதல்

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடியின் ஆறாண்டு காதல் இந்தாண்டு திருமண பந்தத்தில் முடிந்தது. கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணம் முதல் குழந்தை பிறந்தது வரை தொடர்ந்து டாக் ஆஃப் தி டவுனாக வலம் வந்தனர், இந்த தம்பதியினர்.

நீண்ட நாள் தோழியுடன் ஹரிஷ் கல்யாண் திருமணம்

இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த ஹரிஷ் கல்யாண், கடந்த அக்டோபர் மாதம் தனது நீண்ட நாள் தோழியான நிவேதாவை திருமணம் செய்து கொண்டார்.

ரீல் டு ரியல் : கௌதம் கார்த்திக் - மஞ்சிமா

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் - தனது காதலியான மஞ்சிமா மோகனை கடந்த நவம்பர் மாதம் கரம் பிடித்தார். இருவரும் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். பின்னர் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் காதலர்கள் ஆக மாறி, தற்போது இல்லறத்தில் இணைந்துள்ளனர்.

நண்பரை கரம் பிடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி

இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்து இருப்பது நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹேல் கதுரியா ஜோடி. தனது நண்பரான சோஹேலை, கடந்த டிசம்பர் 4 தேதி, ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்து நடந்த பிரம்மாண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டார், நடிகை ஹன்சிகா மோத்வானி.


Next Story

மேலும் செய்திகள்