"பெரும்பாலான மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளதாக மாணவர்களே கூறினர்" - ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன்

x

"பெரும்பாலான மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளதாக மாணவர்களே கூறினர்" - ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன்

மாநில கல்வி கொள்கையை வகுக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, அது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை மதுரையில் நடத்தியது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி முருகேசன், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கருத்துகள் பெறப்பட்டதாகவும், பெரும்பாலான மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளதாக மாணவர்களே தங்களிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும், அதை சரி செய்ய வேண்டியது நமது கடமை என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்