Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-06-2023) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (23-06-2023) | Morning Headlines | Thanthi TV
x
  • அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.... உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக தீவிரவாதம் உள்ளதாகவும், வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைவதாகவும் பேச்சு...
  • பிரதமர் மோடி பேசியபோது, எழுந்து நின்று கை தட்டிய அமெரிக்க எம்.பி.க்கள்...
  • இந்தியா உடனான பொருளாதார உறவு, கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக வளர்ச்சியடைந்துள்ளது என அமெரிக்க அதிபர் பைடன் பெருமிதம்... இந்தியா அமெரிக்கா இடையிலான நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி....
  • பிரதமர் மோடியை பார்ப்பதற்காக, வெள்ளை மாளிகையில் குவிந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்... மோடி.... மோடி என முழக்கமிட்டு உற்சாகம்...
  • பாஜகவுக்கு எதிராக பீகாரில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உட்பட 6 மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்... காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சரத்பவார், பருக் அப்துல்லா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்...
  • எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பீகார் சென்றார், தமிழக முதல்வர் ஸ்டாலின்... சமூக மண்ணில் இருந்து எதிர்க்கட்சிகளின் போர் முழக்கம் தொடங்குவதாக பெருமிதம்...
  • பீகார் சென்றார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி... ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார்...
  • எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளிநடப்பு செய்யலாம் என தகவல்... டெல்லி அரசு மீதான மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை எதிர்ப்பு தெரிவிக்காததால் முடிவு...



Next Story

மேலும் செய்திகள்