மன்னரின் உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி -தமிழக அமைச்சர்களில் முதன்முறையாக பெற்ற அமைச்சர் சேகர்பாபு

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 26ம் தேதி நவராத்திரி நடைபெற உள்ளது...

அதில் பங்கேற்பதற்காக தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய சாமி சிலைகள் குமரி பத்மநாபபுரம் அரண்மணையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது...

முன்னதாக அரண்மனையில் மன்னரின் உடைவாளை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் கேரள அமைச்சர்கள் ராதா கிருஷ்ணன், சிவன் குட்டி, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழக அமைச்சர்களிலேயே முதன்முறையாக அமைச்சர் சேகர்பாபு மன்னர் உடைவாளைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வைத் தொடர்ந்து ஊர்வலம் கோலாகலமாகத் துவங்கியது.


Next Story

மேலும் செய்திகள்