"தேசிய கல்வி கொள்கையில் சில நல்ல அம்சங்கள் உள்ளது" - உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி

x
  • மாநிலங்கள் தங்கள் கல்வி கொள்கையை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
  • சென்னையில், இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்ற உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் AICTE தலைவர் சீதாராம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
  • நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, தேசிய கல்வி கொள்கையில் சில நல்ல திட்டங்கள் இருந்தாலும் அதில் உள்ள நுழைவு தேர்வு உள்ளிட்டவற்றை தமிழக அரசு எதிர்ப்பதாக தெரிவித்தார்.
  • அனைத்து மாநிலங்களும் தங்களுக்கென தனி கல்வி கொள்கையை வைத்துள்ளது என்றும், மாநிலங்கள் தங்கள் கல்வி கொள்கையை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் பொன்முடி அப்போது கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்