திடீரென கார் மீது குதித்த 'மிளா'..சாலையில் அப்படியே குப்புற கவிழ்ந்த கார்.. | Kerala | Munnar | Deer

x

கேரள மாநிலம் மூணாருக்கு சேலத்தைச் சேர்ந்தவர்கள் நால்வர் சுற்றுலா சென்றிருந்த போது, ஓடிக் கொண்டிருந்த கார் மீது திடீரென குதித்த மிளா மானால் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது... இரண்டரை வயது குழந்தை உட்பட 4 பேர் உடுமலைப்பேட்டை மூணாறு தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த போது, திடீரென மிளா மான் காரின் மீது குதித்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். கார் மீது குதித்த மிளா மான் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது...


Next Story

மேலும் செய்திகள்