பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்த மிகைல் கோர்பச்சேவ் 91 வயதில் காலமானார்

x

பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்த மிகைல் கோர்பச்சேவ் 91 வயதில் காலமானார்


உலகத் தலைவர்கள் பலரும் முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கெல் கோர்பச்செவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோர்பசேவ் "வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தவர்" என்றும், அமைதிக்காக அயராது போராடிய உலகளாவிய தலைவரை இவ்வுலகம் இழந்து விட்டது என்றும் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனி குட்டெரஸ் புகழாரம் சூட்டியுள்ளார். ரஷ்ய அதிபர் புடின், கோர்பசேவ் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Ursula von der Leyen, "சுதந்திர ஐரோப்பாவுக்கான வழியைத் திறந்த" ஒரு "நம்பகமான மற்றும் மரியாதைக்குரிய தலைவர் என்று கோர்பசேவைப் பாராட்டியுள்ளார். உக்ரைனை புதின் ஆக்கிரமித்து வரும் இந்த நேரத்தில் கோர்பசேவின் அர்ப்பணிப்பு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்