சென்னையில் ஏரிக்கு அடியில் செல்ல போகும் மெட்ரோ ரயில்

x

மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை தொடங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சென்னை கீழ்பாக்கம், நந்தனம், ஆயிரம் விளக்கு ஆகிய மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்திற்கு கீழ் சுரங்கம் அமைக்கப்படுகிறது.

ஏற்கனவே சுரங்கப்பாதை உள்ள இடத்தின் கீழ் சுரங்கம் அமைக்கும் பணி சவாலானது என்பதால் இந்த பணிகளுக்காக சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மெட்ரோ ரயில் நிறுவனம் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் அடையாறு ஆற்றின் கீழ், சென்னை கீழ்ப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகே சேத்துப்பட்டு ஏரியின் கீழ் மெட்ரோ சுரங்கபாதை அமைக்கப்படவுள்ளது.

தண்ணீருக்கு கீழ் மெட்ரோ சுரங்கபாதை அமைக்கும் போதும் நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.

இதனால் சென்னை சேத்துப்பட்டு ஏரியின் கீழ் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்