ஏப்ரல் 1 முதல்... மெர்சிடிஸ் பென்ஸ் அதிரடி..

x

ஏப்ரல் ஒன்று முதல் மெர்சிடீஸ் பென்ஸ் கார்கள் விலைகள் 5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளன.

  • விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் தயாரிக்கும் மெர்சிடீஸ் பென்ஸ் கார்களின் விலைகள் 2 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை உயர்கிறது.
  • ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியாவின் கார் உற்பத்தி தொழிற்சாலை, மகாராஷ்ட்ராவின் பூனே நகரில் உள்ளது.
  • ஏ கிளாஸ் லிமோசின் காரின் விலை 2 லட்சம் ரூபாய் அதிகரித்து, 46 லட்சம் ரூபாயாக உயர்கிறது.
  • எஸ் 350டி ரக பென்ஸ் கார் விலை 7 லட்சம் ரூபாய் உயர்ந்து, ஒரு கோடியே 71 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
  • பென்ஸ் கார்களின் டாப் ரகமான மேபேக் எஸ் 580இன் விலை 12 லட்சம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 2 கோடியே 69 லட்சம் ரூபாயாக உயர்கிறது.
  • யூரோவிற்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு காரணமாக விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மெர்சிடீஸ் இந்தியா கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்