வடகிழக்கில் பறக்க போவது யாரின் கொடி..? - நாகாலாந்து, மேகாலயாவில் வாக்குப்பதிவு எவ்வளவு?

x
  • நாகாலா ந்து மற்றும் மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
  • நாகாலாந்து மற்றும் மேகாலாயாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
  • மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
  • நாகாலாந்து , மேகாலயா முதலமைச்ச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர். மேகாலயாவில் 63.91% வாக்குகளும் நாகாலாந்தில் 72.99% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • இரு மாநிலங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாகவும் , எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்