பட்டறைக்குள் புகுந்து முகமூடி கும்பல் கொலைவெறி தாக்குதல் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சேலத்தில் பட்டறைக்குள் புகுந்து முகமூடி கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x

சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சிவகுமார் என்பவர், பள்ளப்பட்டி அருகே இயந்திரங்களை தயார் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று காலை, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், பட்டறையில் இருந்த சிவகுமாரை இரும்புக்கம்பியாலும், அரிவாளாலும் தாக்கியுள்ளது. அதைத் தடுக்க வந்த பட்டறை ஊழியர்கள் பாஸ்கர், சாரதி ஆகியோர் மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தி விட்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இதில், பலத்த காயமடைந்த மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரித்ததில், சிவகுமாருக்குச் சொந்தமான வீட்டில் குத்தகைக்கு குடியிருந்த வேலாயுதம் என்பவருக்கும், சிவகுமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தாக்குதல் நடைபெற்றதா, வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, அந்த முகமூடி கும்பல், மூவரையும் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்