மணிப்பூரில் பெண்களின் வீடியோ - எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது..? | Manipur | violence

x

மணிப்பூரில் பெண்களை வீடியோ எடுத்த நபரை கைது செய்த விசாரணை அமைப்புகள், வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மணிப்பூரில் பெண்களை உடைகளின்றி வீதியில் ஊர்வலமாக அழைத்து வந்த வீடியோ வெளியாகி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். வீடியோவில் உள்ள மற்றவர்களை கைது செய்யும் முயற்சியும் நடந்து வருகிறது. இதனிடையே பெண்களை வீடியோ எடுத்த நபரை விசாரணை அமைப்புகள் கைது செய்துள்ளன. அவர் பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்