மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டி - பாரம்பரியம் போற்றும் பழநி

x

பழனி அருகே பாரம்பரிய முறைப்படி உழவு செய்ய ஏர் மாடுகள் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு விடப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது...

இரட்டை மாடுகளை நிற்க வைத்து ஏர் கலப்பை பூட்டி வைத்து சேறு வயலை உழ வைத்ததெல்லாம் எப்போதோ மலையேறி விட்டது...

இந்த காலத்தில் எல்லாம் இருக்கும் கொஞ்சம் நஞ்ச விவசாயிகளும் டிராக்டர்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்...

இதனால் உழவு மாடுகளின் தேவையும் குறைந்து போகவே, பலர் மாடுகளை பராமரிக்க வசதியின்றி மாடுகளை விற்று விட்டனர்...

ஆனால், பழனியில் கோம்பை பட்டி, கணக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலானோர் தற்போது பாரம்பரிய உழவு முறைக்குத் திரும்பி வருகின்றனர்...

வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு கிடைப்பதைப் போல, பழனி கிராமங்களில் ஏர் கலப்பையுடன் மாடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன...

ஒரு ஜோடி உழவு மாடுகளை ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து விவசாயிகள் நிலத்தை உழ பயன்படுத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்