'மாமனிதன் வைகோ' படம் - திரையரங்கில் துரை வைகோ முன்னிலையில் மதிமுகவினர் தகராறு! தேனியில் பரபரப்பு

x

'மாமனிதன் வைகோ' படம் - திரையரங்கில் துரை வைகோ முன்னிலையில் மதிமுகவினர் தகராறு! தேனியில் பரபரப்பு

மதிமுக சார்பில், வைகோ குறித்த "மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் தேனியில், திரையரங்கில் திரையிடப்பட்டது.

இதற்காக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ திரையரங்கிற்கு வந்தார்.

அவருக்கு தேனி மாவட்டம் மதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வைகோவின் ஆவணப்படம் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதிமுக நிர்வாகிகள் வந்திருந்தனர்.

அவர்களில் ஒரு சிலருக்கு படம் பார்க்க டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், தொண்டர்கள், திரையரங்கு வளாகத்தில் மதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






Next Story

மேலும் செய்திகள்