மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநர் சில்மிஷம்.. ஆட்டோவுடன் தர தரவென இழுத்து செல்லப்பட்ட மாணவி

x

மாணவியிடம் ஆட்டோ ஓட்டுநர் சில்மிஷம்..ஆட்டோவுடன் தர தரவென இழுத்து செல்லப்பட்ட மாணவி-பதறவைக்கும் காட்சி

மகாராஷ்டிராவில் தகாத முறையில் நடக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க முயற்சித்து, கல்லூரி மாணவி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி சாலையில் நடந்து சென்றபோது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார். அப்போது மாணவி சத்தமாக கத்த ஆரம்பித்தவுடன், கையை உதறி தப்பிக்க முயன்றார். ஆனால் ஆட்டோ ஓட்டுநரை கல்லூரி மாணவி வெளியே இழுக்க முயன்ற நிலையில், ஓட்டுநர் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட மாணவி, பின்பு தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்