விண்ணில் சீறிப் பாய்ந்த 'எல்.வி.எம்3 - எம்3'! - புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தபட்டதா..?

x

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 'எல்.வி.எம்3 - எம்3' ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 36 செயற்கைகோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன...

இஸ்ரோவின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா' நிறுவனம் 'ஒன் வெப்' நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த வகையில் கடந்த அக்டோபரில் முதற்கட்டமாக 36 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து மீதமுள்ள 36 செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கான கவுன்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 9 மணியளவில் 43 புள்ளி 5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்ட இஸ்ரோவின் 'எல்.வி.எம்3-எம்3' ராக்கெட் 36 செயற்கைகோள்களை சுமந்தபடி விண்ணில் பாய்ந்தது. இந்த நிகழ்வை ஏராளமான பள்ளி மாணவர்கள், வானியியல் ஆர்வலர்கள் கண்டு களித்தனர். இதனிடையே மொத்தம் 5,805 கிலோ எடைக்கொண்ட இந்த 36 செயற்கை கோள்களும், 450 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்