நாய்களுக்காக சொகுசு பஸ்... Alaskaல டூர் கிளம்பும் நாய் கூட்டம்...

x

மனுச பயலுக ட்ராவல் பன்றதுக்கே நம்ம ஊர்ல் பஸ் கிடைக்க மாட்டேங்குது... ஆனா இங்க நாய்களுக்காக சொகுசு பஸ்... /டூர் கிளம்பும் நாய் கூட்டம்...குடுத்து... டூர் கூட்டிட்டு போறாங்க பாருங்களேன்...

நம்மூர்ல பெண்களுக்கு பிங்க் பஸ், பொதுமக்களுக்கு பச்சை பஸ், வெளியூர்காரனுக்கு சிலீப்பர் பஸ்ன்னு... வசதிக்கு ஏற்றமாதிரி பஸ்லயே பல வெரைட்டி இருக்கு... இதுவரைக்கும் மனுஷங்க மட்டுமே பஸ்ல டிராவல் பண்ணிட்டு இருந்த இந்த வழக்கம் மாறி... இப்போ நாய்களும் பஸ்ல டிராவல் பண்ண ஆரமிச்சுருக்குங்க இங்க...

Alaskaல இருக்க Skagway சிட்டியில வசிச்சுட்டு வரவங்கதான் Lee and Moo Thompson தம்பதி... ஏற்கனவே கப்புல்ஸா பல பிஸ்னஸ் செஞ்சுட்டு வந்த இவங்க... உள்ளூர்ள இருக்க பெட் லவ்வர்ஸ்காக கண்டுபிடிச்சதுதான் இந்த Mo Mountain Mutts dog bus...

ஹாஸ்பிட்டல் , பார்க்ன்னு நாய்களை வெளியில கூட்டிட்டு போக டைம் இல்லாத ஓனர்கள்...தங்களோட செல்லப்பிராணிக்கு ஸ்னாக்ஸ்லான் பேக் பண்ணி கொடுத்து... தினமும் இந்த நாய் பஸ்ல ஏற்றி விட்டுடுவங்களாம்... பஸ் டிரைவரும் நாய்கள டிராப் பண்ணிட்டு... திரும்பவும் பிக்கப் பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்து விட்றுவாங்களாம்... இதுல நல்ல விஷயம் என்னன்னா... வீட்டுல வளக்குற நாய்கள் மட்டுமில்லாம... ரோட்ல இருக்க நாய்களும் பஸ்ல இலவசமா டிராவல் பண்ணலாமாம்... பாருங்க நம்மூரு டவுன் பஸ்ல போற மாதிரி எவ்ளோ ஜாலியா போறாங்கனு.... ஹ்ம்ம் எது எப்டியோ மனுஷங்கள மாதிரி ஜன்னல் சீட்டுக்கு சண்டைபோடாம... சமத்துபுள்ளையா இருந்தா சரிதான்...



Next Story

மேலும் செய்திகள்