ராஜஸ்தானிடமிருந்து நம்பர் 1 இடத்தை தட்டிப்பறித்த லக்னோ..!

x

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்,10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ஜெய்பூரின் சவாய் மன்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து154 ரன்களை எடுத்தது. பின்னர், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்