நியூசிலாந்தில் தேர்தல்களில் வாக்களிக்க குறைந்தபட்ச வயது 16ஆக குறைப்பு? | newzealand | voting

x

உலகிலேயே முதன் முறையாக, நியூசிலாந்து நாட்டில் தேர்தல்களில் வாக்களிக்க, குறைந்தபட்ச வயது 18இல் இருந்ந்து 16ஆக குறைக்கப்பட உள்ளது. 16 மற்றும் 17 வயதினருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவது, நியூசிலாந்து நாட்டின் அரசியல் சாசனத்திற்கு முரணானது, பாரபட்சமானது என்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் திங்கள் அன்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை ஆதரிப்பதாக கூறியுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென், இந்த மசோதாவை நிறைவேற்ற தேவையான 75 சதவீத வாக்குகளை பெறுவது கடினமாக இருக்கும் என்றார். இத்தகைய மசோதாவை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்பதால், இது நிறைவேற்றப்படுவது கடினம் என்று கருதப்படுகிறது. உலகிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்