"அன்புக்குரிய தம்பி சூர்யா..." - முதல்வர் ஸ்டாலின் ட்விட்

x

ஏழை - எளிய மக்களின் கல்விக்காக அக்கறையோடு செயல்பட்டு வருவதாக நடிகர் சூர்யாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவை இயக்குனராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியதேவ் சட்ட அகாடமியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், ஏழை, எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும், அன்புக்குரிய தம்பி சூர்யாவின் பங்களிப்பை பாராட்டுவதாக கூறியுள்ளார். நீதியரசர் சந்துருவுக்கும், ஜெய்பீம் திரைப்படத்திற்கு பிறகும் சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் சூர்யா, ஞானவேல் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்