இன்று முதல் பல அதிரடி மாற்றங்கள்...எது விலை உயரும்? எது விலை குறையும்? - கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

x
  • இன்று முதல் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் விலை 12 சதவீதம் அளவிற்கு விலை உயரவுள்ளது. பாராசிட்டமால், அமாக்ஸிசிலின் உள்ளிட்ட 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 900க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை உயரவுள்ளது.
  • அதே வேளையில், அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முழுமையான இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படவுள்ளதால், அந்த மருந்துகளின் விலை இன்று முதல் குறையவுள்ளது.
  • மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் செல்போன், டிவி. எலெட்ரிக் வாகனங்கள் , கேமரா லென்ஸ்கள் , பொம்மைகள், மிதிவண்டிகள், செல்போன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
  • அதே வேளையில் இறக்குமதி செய்யப்படும் வைரம், தங்கம், வெள்ளி , சிகரெட், ரப்பர் மற்றும் ஆடைகள் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை இன்று முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • இன்று முதல் HUID எனப்படும் 6 இலக்க ஹால்மார்க் அடையாள எண்கள் உள்ள நகைகள் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளன.
  • அண்மையில் காங்கிரஸ் கைப்பற்றிய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரவுள்ளது.
  • வருமான வரி தொடர்பான மாற்றங்களும் இன்று முதல் அமலுக்கு வருவதால், ஆண்டு வருமானம் 7 லட்ச ரூபாய் வரை உள்ள ஊழியர்கள் எந்த வரியும் இனி செலுத்த வேண்டியதில்லை.
  • கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் கடன் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு இன்று முதல் லாபத்துக்கு வரி விதிக்கப் படும்.
  • ஆன்லைன் விளையாட்டுகளில் கிடைக்கும் வெற்றி தொகைக்கு இன்று முதல் 30 சதவீதம் டிடிஎஸ் வரி விதிக்கப்படும்.
  • இன்று முதல் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
  • தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், அது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
  • இன்றுடன் ட்விட்டரில் அக்கவுண்ட்களை வெரிபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. இதனால் பலரது ட்விட்டர் கணக்கின் புளூ டிக் நீக்கப்படும்.
  • டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தியிருப்பதால், இன்று முதல் இந்த நிறுவனங்களின் பைக் மற்றும் கார்கள் விலை உயரவுள்ளன.
  • கீழடி அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
  • கோடை கால சீசனை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களில் இன்று முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இப்படி புதிய நியாண்டின் தொடக்கமான இன்று முதல் பல துறைகளில், பல புதிய விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்