காமராஜர் பிறந்தநாளில் "ஸ்பெஷல்" உணவில் பல்லி.. 60 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - அரசு பள்ளியில் பரபரப்பு

x

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே, பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வேட்டவலம் அடுத்த தண்டரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, மதிய உணவில், சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. சர்க்கரை பொங்கலை சாப்பிடும்போது பல்லி இருந்தது கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, 5 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவர்களின் உடல்நிலையி​ல் எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்