எஸ்ஐ-க்கு Whatsapp-ல் வந்த லிங்க்... ஒரே கிளிக்கில் விபூதி அடித்த கும்பல் - சென்னையில் பரபரப்பு..!

x

சென்னை காவாங்கரையை சேர்ந்த நுண்ணறிவுப்பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, வங்கி ஸ்டேமென்ட்டை பார்க்க பயன்படுத்துமாறு, லிங்க் வந்துள்ளது. அதற்குள் சென்ற ராஜ்குமார் அதில் தனது விவரங்களை பதிவிட, அவரது கிரெடிட் கார்டிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. அதேபோல் புத்தகரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான சபரிநாதனுக்கு, கிரெடிட் கார்டுக்கு கிடைத்துள்ள 5 ஆயிரம் புள்ளிகளை பெற கிளிக் செய்யுமாறு, வாட்ஸ் அப்பில் லிங்க் வந்துள்ளது. லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கமான செயலிக்குள் சென்ற அவர், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட, அவரது கிரெடிட் கார்டில் இருந்து 56 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் புழல் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பெயரில், விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்