திருடனுக்கு தேள் கொட்டிய கதையாய்... குருவிகளுக்கே விபூதி அடித்த குருவிகள்? போலீசாரை அதிரவைத்த...

x

சென்னையில் போலீசார் எனக்கு கூறி 24 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துச் சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயப்பேட்டையை சேர்ந்த பஷீர் அகம்மது, தன்னிடம் உள்ள தங்க நகையை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் சுமார் 24 லட்ச ரூபாய்க்கு விற்றிருக்கிறார். பின்னர் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் காஜா மொய்தீன் என்பவருடன் சென்றிருக்கிறார். அப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அருகே இருசக்கர வாகனத்தில் வரும்போது, அவர்களை மற்றொரு பைக்கில் வந்த இரண்டு பேர் காவல்துறையினர் எனக் கூறி மறித்து ள்ளனர். அப்போது, அவர்களிடம் இருந்த 24 லட்சம் பணத்திற்கு உண்டான ஆவணங்களை கேட்டு உள்ளனர். ஆவணங்கள் இல்லாததால் காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அவர்களின் கவனத்தை திசை திருப்பி சென்றுள்ளனர். பூக்கடை காவல் நிலையம் வந்து விசாரித்த போதுதான், இருவரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர் .இது தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து தங்கங்களை கொண்டு வரும் குருவிகளிடமிருந்து, தங்கத்தை பெற்று, அதனை விற்று பணமாக்கும் வேலையில் பஷீர் அகமது ஈடுபட்டு வருவது தெரிய வந்திருக்கிறது‌.

இவர்களை நோட்டமிட்ட இருவர் போலீசார் என கூறி கொள்ளையடித்தவர்களும் குருவி கும்பல்களை சேர்ந்தவர்களாக இருக்க கூடுமா என்ற கோணத்தில் பூக்கடை போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்