“கஞ்சாவால் கருகிய வாழ்க்கை..“ - நிறைவேறாத கடைசி ஆசை..! - தமிழர் தங்கராஜின் தாயார் தவிப்பு

x

சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தூக்கிலிடப்பட்ட தமிழரின் கடைசிநேர வேதனையை பகிர்கிறது இந்த தொகுப்பு...

தங்கராஜ் சுப்பையா... 2013-ல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கஞ்சா கடத்தலை ஒருங்கிணைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்பு சட்டங்களை கொண்ட சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஓராண்டில் மட்டும் 11 பேரை தூக்கிலிட்டுள்ளது சிங்கப்பூர் அரசு.

அந்த வகையில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட தங்கராஜ் சுப்பையாவுக்கு, 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது.

சட்டப்போராட்டங்களில் தங்கராஜ்க்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காததோடு, அதிபரும் கருணை மனுவை நிராகரிக்கவே புதன் கிழமை காலையில் தூக்கிலிடப்பட்டார். மனித உரிமை ஆர்வலர்கள், சர்வதேச தலைவர்கள், ஐ.நா. எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப் பட்டார். தமிழரான தங்கராஜுக்கு விசாரணை யின் போது ஒரு மொழிப்பெயர்ப்பாளர் கூட உதவிக்கு அனுமதிக்கப்படவில்லை எனவும் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்...

இது ஒரு புறம் தொடர தங்கராஜ் தூக்கிலிடப்பட்டது அவரது வயது முதிர்ந்த தாயார் பாப்பாவுக்கே தெரியாது என்பது மற்றொரு வேதனைக்குரிய செய்தி... தங்கராஜை தூக்கிலிட உள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்ததும் அவரது குடும்பத் தார், சாங்கி சிறையில் அவரை சந்தித்து பேசியுள்ளனர்.

சாங்கி சிறையில் கண்ணாடி கூண்டுக்கு பின்னால் இருந்து தங்கராஜுவை சந்தித்ததாக கூறும் உறவினர்கள், தாயார் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னை துணிச்சல் மிக்கவராக தங்கராஜ் காட்டிக்கொண்டார் என தெரிவிக் கிறார்கள்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக அறிந்து, தனது கடைசி ஆசையையும் தங்கராஜ் சுப்பையா பகிர்ந்து கொண்டார் என்கிறார் மரண தண்டனைக்கு எதிரான செயற்பாட்டாளர் கோகிலா அண்ணாமலை..

வேதனை நிறைந்திருந்த தருணத்தில் தனது சிறுவயதில் மகிழ்ச்சியாக இருந்த நாட்களை நினைவுகூர, உறவினர் களிடம் முந்தைய புகைப்படங்கள், விழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வாங்கி பார்த்திருக்கிறார். அப்போது சிலாங்கூர் அங்கால பரமேஸ்வரி அம்மன் ஆலைய பிரசாதமான குங்குமத்தையும், அனுமன் ருத்ராட்சம் என அழைக்கப்படும் 11 முக ருத்ராட்சத்தையும் கேட்டிருக்கிறார்.https://youtu.be/OtyXNSIpFIs

ஆனால், சிறை நிர்வாகிகள் அதனை தங்கராஜிடம் ஒப்படைக்க அனுமதிக்கவில்லை எனக் கூறும் கோகிலா அண்ணாமலை, தங்கராஜின் இறுதி ஆசைகள் நிறைவேறா மலேயே போய்விட்டது என வேதனை தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது எனக் கூறும் தங்கராஜுவின் உறவினர்கள், அதற்கான தங்கள் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்