"மற்ற பாட வேளைகளை விளையாட்டிற்காக கடன் கொடுங்கள்" - வேடிக்கையாக கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

மற்ற பாட வேளைகளை, விளையாட்டிற்காக கடன் கொடுங்கள் என, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேடிக்கையாக கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் கோப்பை போட்டியில், தஞ்சாவூர் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் களம் நமதே என்ற வீடியோவும், முதலமைச்சர் கோப்பைக்கான லோகோவும் வெளியிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்