போதை பொருளாக பயன்படுத்தப்படும் LAUGHING GAS... பிரிட்டனில் தடை விதிக்க முடிவு

x
  • பிரிட்டனில் பதினாறு முதல் 24 வயது வரையிலான இளைஞர்களிடையே, நைட்ரஸ் ஆக்சைடை போதைப்பொருளாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • அந்நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் இதனை போதைக்காக பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • இதனால் நரம்பியல் மற்றும் உளவியல் பாதிப்புகள் ஏற்படுவதுடன், குற்றச்சம்பவங்களும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், பிரிட்டனில் போதை பயன்பாட்டுக்காக Laughing Gas-ஐ விற்பனை செய்வதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள சமூக விரோத செயல் தடுப்பு நடவடிக்கைக்கான புதிய வரைவு அறிக்கையில், போதைக்காக நைட்ரஸ் ஆக்சைடு விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்