இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-03-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறான தகவல்...

இதுதொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் நோட்டீஸ் பிறப்பித்தவர் சஸ்​பெண்ட் செய்யப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்...

--

கோடைகால மின் தேவைக்காக, ஒரு யூனிட் மின்சாரத்தை 8 ரூபாய் 50 காசுக்கு பெற டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது...

அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்...

---

டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய புகாரில் கைது செய்து, தனிநபர் சுதந்திரத்தை மீறியுள்ளது வேதனை தருகிறது....

மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

--

நாட்டை காப்பாற்ற வேறுபாடுகளை களைந்து மதசார்பற்ற தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்.....

நாடாளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்...

---

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோவை வெளியிட்ட நபர் மன்னிப்பு கோரினார்...

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு...

----

தமிழகத்தில் பாஜகவை வளர்க்க, எந்த முடிவையும் எடுப்பேன் என அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு...

கட்சி விவகாரங்களில் ஜெயலலிதா முடிவெடுத்தது போன்றே தமது முடிவுகளும் இருக்கும் என்றும் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்