சமபலத்துடன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா - தொடரை கைப்பற்றப்போவது யார்?

x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும், 3 மற்றும் 4வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம், 2க்கு 2 என்ற சமநிலையில் இரு அணிகளும் இருப்பதால், இன்று நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. இதனால், இரவு 7 மணிக்கு போட்டி தொடங்க உள்ள இந்த போட்டி, ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்