லக்கீம்பூர் கிரி வன்முறை வழக்கு..தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

லக்கீம்பூர் கிரி வன்முறை வழக்கு..தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
x

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கிரியில் கடந்த 2021, அக்டோபர் 3-ந் தேதி நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஆஷிஷ் மிஸ்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, சம்பவம் நடைபெற்ற போது மனுதாரர் அந்த இடத்தில் இல்லை என்றும், கேள்விப்பட்டதைக் கொண்டு சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார். உத்தர பிரதேச அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் கரிமா பிரசாத் பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜரான துஷ்யந்த் தவேவும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டனர். அனைத்து தரப்பு வாரங்களையும் பதிவு செய்து கொண்ட உச் நீதிமன்றம், ஜாமின் கோரி ஆஷிஷ் மிஸ்ராவின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்