தேசிய கொடியை கையில் ஏந்தி கும்மியாட்டம் - சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடிய கிராம மக்கள்

x

தேசிய கொடியை கையில் ஏந்தி கும்மியாட்டம் - சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடிய கிராம மக்கள்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கும்மி ஆட்டம் மூலம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கிராம மக்கள் கொண்டாடினர். 75ஆவது சுதந்திர தினத்தை யொட்டி குங்குமம் பாளையம் கிராமத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேல ராசி பவளக்கொடி கும்மியாட்ட குழுவினர் சார்பில் மறைந்த தியாகிகளையும் நினைவு கூறும் விதமாக, கிராம மக்கள் தியாகிகளை போற்றி கும்மி பாடலை பாடி நடனமாடினர். மேலும், பாட்டுக்கு தகுந்தவாறு தேசிய கொடியை கையில் ஏந்தியும் நடனம் ஆடினர்.


Next Story

மேலும் செய்திகள்