காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் - உயிரிழந்தவர் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மர்ம பொருள்

x

கோவையில், காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல், மர்மபொருள் ஒன்றை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து 6 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இந்த காட்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற 4 பேர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்