கோவை சம்பவம் - கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளுநர் ரவி எச்சரிக்கை

x

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் அனைவருக்கும் எதிரானவர்கள் என்றும், அவர்கள் யாருக்கும் நண்பர்கள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார். சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஒரு பயங்கரவாத அமைப்பை தடை செய்ததில் இருந்து பல்வேறு குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த ஆளுநர் ரவி, தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய, மாநில அமைப்புகளுக்கு இடையே ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நமது கண்காணிப்பு அமைப்புகள் தோற்றுவிட்டதா என்று கேள்வி எழுப்பிய அவர், சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே இது ஒரு தீவிரவாத தாக்குதல் கண்டறியப்பட்டு, தமிழக காவல்துறை எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக தெரிவித்தார். ஆனாலும், என்ஐஏ-வை அழைக்க 4,5 நாட்கள் எடுத்துக் கொண்டதை விமர்சித்த அவர், தீவிரவாதிகளுக்கு கால அவகாசம் வழங்குவதால் அவர்கள் ஆதாரங்களை அழிக்கக் கூடும் எனவும் குறிப்பிட்டார். தீவிரவாதிகளை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்த ஆளுநர் ரவி, இவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்