கோவையில் வெடித்து சிதறிய கார் 9 பேரிடம் கைமாறியது - வெளியான புதிய தகவல்

x

கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் கைதான முகமது தல்கா, தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவரின் தம்பி மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, கைதான முகமது தல்காவின் பெரியப்பா என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

கோவையில் வெடித்து சிதறிய கார் 9 பேரிடம் கைமாறியதும், கடைசியாக முகமது தல்கா மூலம் ஜமேஷாவிடம் சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் கொடுத்த விவகாரத்தில் முகமது தல்கா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 4 பேரும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்