Troll செய்த ரசிகர்களுக்கு கோலி நெத்தியடி பதிலடி

x

இணையத்தில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் விராட் கோலி இன்ஸ்டாவில் செய்தியை பகிர்ந்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, கோலி டிரஸிங் ரூமில் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க எழுத்தாளரின் வரிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள கோலி, பிறரின் விமர்சனம் என்பது சிறை போன்றது எனவும், அதில் சிக்கிகொள்ளாமல் இருக்க, பிறரால் வெறுக்கப்படும் நபராக மாற்றிக்கொள்ளுங்கள் என பகிர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்