"கே.எல்.ராகுலும் நானும் திட்டம் போட்டு தான் தோனிக்கு பவுன்சர் வீசினேன்" - மனம் திறந்த மார்க் உட்

x

சென்னை உடனான ஐபிஎல் லீக் போட்டியில் தோனியின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு திட்டம் தீட்டி பந்து வீசியதாகவும், ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து தோனி சிக்சர்களை அடித்ததாகவும் லக்னோ பவுலர் மார்க் உட் கூறி உள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மார்க் உட் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை தோனி பறக்கவிட்டார். இது தொடர்பாக பேசியுள்ள உட், கே.எல்.ராகுலும், தானும் திட்டம் தீட்டித்தான் தோனிக்கு பவுன்சர் போட்டதாகவும், ஆனால் அதை அற்புதமாக தோனி சிக்சருக்கு அனுப்பியதாகவும் உட் கூறி உள்ளார். தோனி சிக்சர் அடித்தபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை மறக்க முடியாது என்றும் உட் தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்