சச்சினின் சாதனையை முறியடிக்கும் கிங் கோலி?

x

இன்று நடைபெறும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டி, விராட் கோலிக்கு 500வது சர்வதேச போட்டியாகும். இதுவரை 499 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 53.48 சராசரியில் 25 ஆயிரத்து 461 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்களும், 7 இரட்டை சதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 46 சதங்கள் அடித்துள்ள கோலி, விரைவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், கோலி 2வது இடத்தில் உள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையையும் கோலியிடமே உள்ளது. அவர் இதுவரை மொத்தமாக 4 ஆயிரத்து 8 ரன்களை குவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்