கிலோக்கணக்கில் சிக்கிய தங்கம் - கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

x

கோவை விமான நிலையத்தில், 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தீவிர கண்காணிப்பில் இருந்து அதிகாரிகள், ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமாக பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார், கடலூரை சேர்ந்த ஷங்கர், பரமக்குடியைச சேர்ந்த ராம் பிரபு மற்றும் சலத்தை சேர்ந்த குமரவேல் ஆகியோர் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, 4 பேரயும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்