மருத்துவமனையில் பூனைகளை கொன்றார்களா? துன்புறுத்தும் அதிர்ச்சி வீடியோ

x

தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் பூனைகளை பிடித்து கொன்றதாக விலங்கு இன ஆர்வலர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏராளமான பூனைகள் சுற்றி வந்துள்ளன.

இவை அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் பூனைகளைப் பிடித்து கொன்றதாகவும், அவற்றை துன்புறுத்துவதாகவும் விலங்கு இன ஆர்வலர்கள் போலீசாரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ளனர்.

அந்த வீடியோவில் மருத்துவமனை நிர்வாகத்தினர் பூனைகளை துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், நோயாளிகளுக்கு தொல்லை கொடுத்த பூனைகளை பிடித்ததாகவும், பூனைகள் கொல்லப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

இது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்