ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம்- கேரள முதல்வர் விஜயன் கண்டனம்

x

கேரளப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைப் பதவிவிலகச் சொன்னதன் மூலம் ஆளுநர் அதிகாரதுஷ்பிரயோகம் செய்கிறார் என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் சாடியுள்ளார்.

திருவனந்தபுரம், அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசி விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, உச்சநீதிமன்றம் அந்த நியமனத்தை சட்டவிரோதம் என தீர்ப்பளித்தது.

அதையடுத்து, மாநிலத்தின் ஒன்பது அரசுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் பதவிவிலக வேண்டும் என ஆளுநர் ஆரிப் முகமது கான் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று பாலக்காட்டில் பேட்டியளித்த முதலமைச்சர் பினராயி விஜயனிடம் இது குறித்து கேட்கப்பட்டது பதிலளித்த விஜயன், ஆளுநரே துணைவேந்தர்களை நியமிக்கிறார் என்றும்

அதில் சட்டவிரோதம் இருந்தால் அவரே பொறுப்பு என்றும் கூறினார்.

அழிவுகர சிந்தனையோடும், சங் பரிவாரின் கைக்கருவியாகவும் ஆளுநர் கான் செயல்பட்டுவருவதாகவும்,

துணைவேந்தர்களா அவரா யார் பதவிவிலக வேண்டும் என ஆளுநர் கான் முடிவெடுக்க வேண்டும் என்றும்

பினராயி விஜயன் காட்டமாகக் குறிப்பிட்டார்.

ஆளுநர் பதவியை அவர் தவறாகப் பயன்படுத்துவதாகவும்,

இது அரசமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது என்றும் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்