நேருக்கு நேர் மோதிய லாரி-பேருந்து...14 பேர் காயம்...பதறவைக்கும் காட்சிகள்

x

இடுக்கியில் தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம், கட்டப்பனை பகுதியிலிருந்து தொடுபுழா பகுதியை நோக்கி சென்ற தனியார் சுற்றுலா பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்