கீர்த்தி சுரேஷின் பூர்வீக வீடு இதுவா?குடும்பத்தினருடன் ஒரு விசிட் - இணையத்தில் வெளியிட்ட வீடியோ

x

நடிகை கீர்த்தி சுரேஷ் திருக்குருங்குடியில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்குச் சென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் இணைந்து தனது சொந்த ஊரில் உள்ள பூர்வீக வீட்டிற்குச் சென்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் நடிகை கீர்த்தி சுரேஷின் பூர்வீக வீடு அமைந்துள்ளது. இங்கு சென்ற கீர்த்தி சுரேஷ் தனது பால்ய கால நினைவுகளை நினைவு கூர்ந்தார். மேலும், அப்பகுதியில் உள்ள 8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயிலுக்கும் அவர் சென்று பார்வையிட்டார். இதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்