கருணாநிதி நூற்றாண்டு விழா -இன்று மாலை பொதுக்கூட்டம்

x

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. புளியந்தோப்பு பின்னிமில் மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக கடந்த 3ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சி தலைவர்களான கி.வீரமணி, வைகோ, முத்தரசன், திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்