கல்லை போட்டு முதியவர் கொலை.. துப்பு காட்டிய ரேம்போ நாய்

x

கர்நாடகாவில் 60 வயது முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் ரேம்போ மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர்.

கதர் மாவட்டத்தில் உள்ள ஒசஹள்ளி கிராமத்தில் அக்டோபர் 24ம் தேதி, 60 வயதான முதியவர் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்திருந்தனர்.

இது தொடர்பாக அவரின் மகன் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரேம்போ உதவியுடன் போலீசார் வந்தனர்.

பின்னர், அந்த நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று, அருகில் உள்ள வீட்டை பார்த்து குரைத்துள்ளது.

போலீசார் அந்த வீட்டில் இருந்தவர்களை விசாரித்த போது, அந்த முதியவரை கொலை செய்தது அவர்கள் தான் என தெரிய வந்தது.

தகாத உறவின் காரணமாக முதியவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்