கர்நாடக அமைச்சரவை... சித்தராமையா முக்கிய ஆலோசனை- விரைவில் வரப்போகும் அப்டேட்

x

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கர்நாடக பவனில் தங்கியுள்ள அவர்கள் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான வேணுகோபாலை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சி மேலிட தலைவர்களையும் சந்தித்து பேசி முடிவு எடுக்க உள்ளனர். இதன் மூலம் விரைவில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்