"தனது இயக்கத்தில் கமலுக்கு 10 படங்கள், ரஜினிக்கு 25 படங்கள்" - எஸ்.பி முத்துராமன், இயக்குனர்

x

உழைப்பு, தன்னம்பிக்கை, ஈடுபாடு இருந்தால் வெற்றி நம்மைத் தேடி வரும் என இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்துள்ளார். உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப் பேரவை பன்னாட்டு அமைப்பின் ஆண்டு விழா சென்னை சர்.பிட்டி. தியாகராய அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் எஸ்.பி முத்துராமன் ஏவிஎம் ஸ்டூடியோவில் உதவியாளராக வேலை பார்த்ததாகவும், பின் படிப்படியாக உயர்ந்து இயக்குனராக பணியாற்றியதாக குறிப்பிட்டார். மேலும், சிவாஜி கணேசனுக்கு 3 படங்கள் இயக்கியதாகவும், கமலுக்கு 10 படங்களும், ரஜினிக்கு 25 படங்கள் இயக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்