மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் எப்போது வீடு திரும்புவார்..?

x

ஓரிரு நாட்களில் கமல்ஹாசன் இல்லம் திரும்புவார் என போரூர் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது..

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், சளி, இருமலுடன் லேசான காய்ச்சல் உள்ளதால் சிகிச்சை பெற்று வருவதாகவும்

தொடர் சிகிச்சை காரணமாக கமல்ஹாசன் உடல் நலம் தேறி வருவதாகவும், ஓரிரு நாட்களில் இல்லம் திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்