இந்தியன் 2 படப்பிடிப்புக்கு நடுவே வித்தியாசமான கருவியில் தாளம் தட்டும் கமல்ஹாசன்

x

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு நடுவே, ஒரு வித்தியாசமான கருவியில் தாளம் தட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இப்படி திரைப்படங்களில் இசை வாத்தியத்தை வாசிப்பதுபோல் நடிப்பது கமலுக்கு ஒன்றும் புதிது கிடையாது.

அபூர்வ ராகங்கள் படத்தில் மிருதங்கம் வாசிக்கும் காட்சிக்காக நிஜமாகவே ஒரு வருடம் மிருதங்கம் கற்றுக்கொண்டாராம் கமல்.

இதை தவிர, வயலின் புல்லாந்க்குழல் உட்பட பல வாத்தியங்களை வாசிப்பதுபோல் நடித்துள்ள கமல், கேரளாவில் விக்ரம் பட ப்ரொமோஷனின் போது செண்டை மேளம் அடித்து அசத்தினார். இப்படி , இசை மீது தனக்கு உள்ள காதலை அவ்வப்போது வெளிப்படுத்த தவறியதே இல்லை கமல்.

அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்புக்கு நடுவே, ஒரு வித்தியாசமான கருவியை கொண்டு மிருதங்கத்தைபோல வாசிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் .

ரிதம் செக்‌ஷன் என்ற கேப்ஷனுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கலைத்துறையில் இவரால் செய்ய முடியாத விஷயம் என்று ஏதேனும் உண்டா என சிலாகிப்பதுடன், அந்த கருவியின் பெயரை சொல்லுமாறு கமலையே கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்


Next Story

மேலும் செய்திகள்